சனாதனம் குறித்து நான் பேசியதில் தவறும் இல்லை. சட்டப்படி சந்திப்பேன்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2023 (14:35 IST)
சனாதனம் குறித்து நான் பேசியதில் எந்த தவறும் இல்லை, இதை நான் சட்டப்படி சந்திப்பேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தபோது அதில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் சேகர் பாபு, உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட போது காவல்துறையினர் நடவடிக்கை  எடுத்திருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் தங்கள் கடமையை செய்ய தவறிவிட்டது என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது விளக்கத்தை அளித்துள்ளார்

சனாதன கொள்கை குறித்து நான் பேசியதில் எந்த தவறும் இல்லை என்றும், அதிலிருந்து நான் பின்வாங்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர் பேசாததை, பெரியார் பேசாததை, திருமாவளவன் பேசாததை நான் பேசவில்லை என்றும், என் கொள்கையில் நான் உறுதியாக இருப்பேன் என்றும், இதில் ஏதாவது பிரச்சனை வந்தால் அதை நான் சட்டப்படி சந்திப்பேன் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக எடுத்த சர்வே!.. விஜயின் வாக்கு வாங்கி!.. அதிர்ச்சியில் ஸ்டாலின்!....

விஜய் எங்கு போட்டியிடுவார்?.. லிஸ்ட்டில் 3 தொகுதிகள்!.. அரசியல் பரபர!...

SIR எதிரொலி!.. தமிழகத்தில் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?..

சபரிமலையில் தரிசன நேரம் மாற்றியமைப்பு.. தேவசம் முடிவுக்கு என்ன காரணம்?

10 தோல்வி பழனிசாமிக்கு 11வது முறையும் தோல்வி தான்: ஆர்.எஸ்.பாரதி

அடுத்த கட்டுரையில்
Show comments