Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலிதா இருந்த வரை நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு வரவில்லை.. உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Webdunia
ஞாயிறு, 15 அக்டோபர் 2023 (20:54 IST)
நீட் தேர்வை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ரத்து செய்தார், முன்னாள் முதலமைச்சர் ஜெயலிதா இருந்த வரை நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு வரவில்லை என  சென்னை, அண்ணாநகரில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
 
நீட் தேர்வை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ரத்து செய்தார், முன்னாள் முதலமைச்சர் ஜெயலிதா இருந்த வரை நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு வரவில்லை, அப்படியென்றால் நீட் தேர்வை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தது யார் என்று உங்களுக்கு தெரியும்.
 
9 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்தார்?  அதானி குடும்பம் மட்டுமே இந்த 9 ஆண்டுகால ஆட்சியில் வாழ்ந்தது. 2018ல் 2020-க்குள் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என பிரதமர் மோடி கூறினார், தற்போது 2048-ல் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்று கூறிவருகிறார்  
 
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதாக நம்மையெல்லாம் ஏமாற்றி வருகிறது, சேர்ந்து வந்தாலும் தனியாக வந்தாலும் வெல்லப்போவது திமுக தான் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி செம்மொழி நாள்.! அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு..!!

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.. மம்தா பானர்ஜி வலியுறுத்தல்..!

சென்னையில் நாய் பிடிக்கும் பணிகள் தொடக்கம்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..!

NDA கூட்டணிக்கு ஆதரவு கிடையாது.! பிஜு ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு..!!

திருச்செந்தூர் கடலில் 5 சவரன் சங்கிலியை தொலைத்த பெண்..! மீட்டு கொடுத்த தொழிலாளர்களுக்கு நன்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments