ரஜினி அரசியலுக்கு வரட்டும்… நான் பதில் சொல்கிறேன் – உதயநிதி ஸ்டாலின் எஸ்கேப் !

Webdunia
திங்கள், 20 ஜனவரி 2020 (07:35 IST)
ரஜினி அரசியலில் இறங்க இருப்பதாக அறிவித்துள்ள நேரத்தில் அவரை திமுக வினர் கட்டம் கட்டி விமர்சித்து வருவது அதிகரித்துள்ளது.

ரஜினி எப்படியும் இந்த ஆண்டு அரசியல் கட்சியை ஆரம்பித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பே அவர் பாஜக ஆதரவு, திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்து விட்டார்.  சமீபத்தில் துக்ளக் விழாவில் பேசிய அவர் ‘முரசொலி வைத்திருந்தால் திமுக காரர்; துக்ளக் வைத்திருந்தால் அவர் அறிவாளி’ என்று அவர் பேசியது திமுக காரர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து திமுக இளைஞரணிச் செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ரஜினியை விமர்சிப்பது ஏன் எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு உதயநிதி ஸ்டாலின் ‘நான் என் டிவீட்களில் ரஜினியைதான் குறிப்பிடுகிறேன் என எதை வைத்து சொல்கிறீர்கள். அவர் இன்னும் அரசியலுக்கே வரவில்லை. அவர் வந்த பின் இந்த கேள்விக்கான பதிலை நான் உங்களுக்கு சொல்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாலையில் மீண்டும் குறைந்த தங்கம்.. இன்று ஒரே நாளில் 3000 ரூபாய் சரிவு..!

ஒரே இரவில் இந்திய இளைஞர் கோடீஸ்வரர் ஆன அதிசயம்.. ஐக்கிய அரபு அமீரகம் கொடுத்த ஜாக்பாட்..!

பவர் பாலிடிக்ஸ்! வெடிக்கும் கோஷ்டி மோதல்... கிருஷ்ணகிரி உபிகளுக்கு டிமிக்கி கொடுக்கும் அமைச்சர் சக்கரபாணி!

மேற்குவங்க மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்.. வகுப்பு தோழன் தான் முக்கிய குற்றவாளி.. விசாரணையில் அதிர்ச்சி..!

மெஸ்ஸி ஏன் வரவில்லை.. கேள்வி கேட்ட நிருபரை தள்ளிய கேரள விளையாட்டு துறை அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments