Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயில்லா பிள்ளைங்க நாங்க.. கைவிட்டுடாதீங்க! - அமைச்சர் உதயகுமார் உருக்கம்!

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (13:27 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அமைச்சர் உதயக்குமார் தங்களை கைவிட்டு விட வேண்டாம் என உருக்கமாக கேட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் உதயகுமார் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அப்போது பேசிய அவர் “நாங்கள் என்ன தவறு செய்தோம் மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பை வழங்க விடாமல் பாடாய் படுத்துகிறார்கள். மறைந்து பதுங்கி இருந்த தீய சக்திகள் எல்லாம் தேர்தலை வைத்து நாடகமாடி வருகிறார்கள். ஜெயலலிதா இருந்திருந்தால் பராசக்தியாக எல்லாரையும் அழித்திருப்பார்” என கூறியுள்ளார்.

மேலும் “ஜெயலலிதா இல்லாமல் நாங்கள் படும் பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. தாயில்லா பிள்ளையாக ஓட்டு கேட்டு நிற்கிறோம்.. எங்களை கைவிட்டு விடாதீர்கள்” என உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 குழந்தைகள் உள்பட 7 பேர் கொலை.. பெண்ணுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

பள்ளி மைதான ரெளடி போல் டிரம்ப் நடந்து கொள்கிறார்: சசிதரூர் விமர்சனம்..!

கமல்ஹாசனை அடுத்து பிரதமர் மோடியை சந்தித்த கனிமொழி.. தமிழக அரசியலில் பரபரப்பு..!

திரும்ப பெறப்படும் புதிய வருமானவரி மசோதா! மீண்டும் புதிய மசோதா! - மத்திய அரசு அதிர்ச்சி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments