Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை மறுநாள் உதயநிதி அமைச்சராகப் பதவியேற்கிறார்!

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2022 (21:32 IST)
நாளை மறுநாள் உதய நிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளதாக ஆளுனர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு  நடந்த சட்டசபை தேர்தலில், முக ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்றன.

எனவே, முக ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றார். இவரது தலைமையிலான அமைச்சரவையில்,துரைமுருகன், அன்பில் மகேஷ், பிடிடி ஆர், சங்கரபாணி உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். 

ஆனால், திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதய நிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பேற்பாரா என்ற எதிர்பார்ப்பு  திமுகவினரிடையே ஏற்பட்ட நிலையில்,  விரைவில் அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்ற தகவல் வெளியானது.

ALSO READ: உதயநிதியை எதிர்த்துப் போட்டியிட்டால் சவுக்கு சங்கருக்கு ஆதரவு - சீமான்
 
இந்த  நிலையில்,   நாளை மறுநாள்(  டிசம்பர் 14 ஆம் தேதி), கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், காலை 9:30 மணியளவில்  உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளதாகவும் இளைஞர் நலன் திட்ட செயலாக்கத்துறை அவருக்கு ஒதுக்கப்பட உள்ளதாகவும்   தகவல் வெளியாகிறது.

மேலும், இதுகுறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியின் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளதாக  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியரை பழிவாங்க நாற்காலியில் வெடிகுண்டு! - அரியானாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பள்ளி மாணவர்கள்!

இந்திய ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்! மும்பையில் பரபரப்பு..!

கைது செய்ய போலீஸ் சென்ற போது கதவை பூட்டி கொண்ட கஸ்தூரி.. என்ன நடந்தது?

நான் களத்தில் இறங்க தயார்..? இந்த தொகுதிதான் நம்ம டார்கெட்! - ஓப்பனா அறிவித்த பா.ரஞ்சித்!

டெல்லில இருந்து அமெரிக்காவுக்கு போக 40 நிமிடம்தான்! - ‘வேல்’ சூர்யா பாணியில் இறங்கிய எலான் மஸ்க்!

அடுத்த கட்டுரையில்
Show comments