Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ஆம் வகுப்பு மாணவியின் ஆபாசபடம்: நண்பருக்கு பகிர்ந்த வாலிபர் கைது!

Webdunia
செவ்வாய், 28 ஜனவரி 2020 (07:52 IST)
10ஆம் வகுப்பு மாணவி ஒருவரை ஆபாச படம் எடுத்தது மட்டுமின்றி அந்த படத்தை நண்பருக்கும் மொபைல் போனில் பகிர்ந்த ஒரு வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர் 
 
கூறைநாடு பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவர், அதே பகுதியில் உள்ள 10ஆம் வகுப்பு மாணவி ஒருவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இளைஞரின் ஆசை வார்த்தை மற்றும் அழகில் மயங்கிய அந்த மாணவி அவருடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது
 
இதனை மறைமுகமாக மொபைலில் வீடியோ படமெடுத்த சந்தோஷ், அந்த மாணவியை அவ்வப்போது மிரட்டியதாக கூறப்படுகிறது அதுமட்டுமின்றி இந்த ஆபாச படத்தை சந்தோஷ் தனது நண்பர் கண்ணன் என்பவருக்கு மொபைல் போன் மூலம் பகிர்ந்துள்ளார் 
 
இந்த வீடியோவை பார்த்த கண்ணன் சபலப்பட்டு அந்த மாணவி தனியாக இருக்கும்போது அவருடைய வீட்டிற்கு சென்று சில்மிஷம் செய்ய முயன்றதாகவும் அந்த நேரத்தில் வெளியில் சென்றிருந்த மாணவியின் பெற்றோர் திடீரென வீட்டுக்கு வந்ததால் அதிர்ச்சியடைந்த கண்ணன் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் கூறப்படுகிறது
 
இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி சந்தோஷ் மற்றும் கண்ணன் ஆகிய இருவரையும் கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்
 
பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி ஏமாற்றி ஆபாச படம் எடுத்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மக்களே! 17 வருடம் கழித்து மீண்டும் வருகிறது டபுள் டக்கர் பேருந்துகள்!

தேஜஸ்வி யாதவை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.யின் மனைவிக்கும் இரட்டை வாக்காளர் அட்டை!

ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு அணையில் வீசப்பட்ட பிணம்.. 14 பேர் கைது..!

கள்ளக்காதலை விட்டுவிட கெஞ்சிய கணவர்.. மனைவி மறுப்பு.. அதன்பின் நடந்த விபரீதம்..!

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவோம்.. டிரம்ப் மிரட்டலுக்கு பயப்படாத இந்தியா.. அதிர்ச்சியில் அமெரிக்கா..!

அடுத்த கட்டுரையில்
Show comments