Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்சாரம் தாக்கி இரண்டு பெண்கள் பலி : சென்னையில் பரிதாபம்

Webdunia
திங்கள், 30 நவம்பர் 2015 (12:27 IST)
சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் மின்சாரம் தாக்கி இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.


 
 
சென்னையில், வியாசர்பாடியில் வசிக்கும் லட்சுமி என்பவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். அவர் தினமும் அதிகாலை, பால் கறந்து அந்த பகுதி மக்களுக்கு கொண்டு சென்று கொடுப்பது வழக்கம். 
 
அதேபோல் சம்பவத்தன்று அதிகாலை ஐந்து மணிக்கு லட்சுமி அந்த பகுதி மக்களுக்கு பாலை கொடுப்பதற்காக சென்றுள்ளார். அவருடன் பசுமாடு, கன்றுக்குட்டி சென்றன. அப்போது சாலையில் அறுந்து விழுந்த கிடந்த மின்சார கம்பியை மிதித்ததால் தூக்கி விசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
மின்சாரம் தாக்கி அவரின் பசுமாடும் உயிரிழந்தது. தகவலறிந்த மின்சார ஊழியர்கள், உடனே அந்த பகுதியில் மின்சாரத்தை நிறுத்தினார்கள்.  அவரின் மரணம் குறித்து எம்.கே.பி நகர் காவல் துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.
 
அதோபோல், காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கத்தில், அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக  தமிழகத்தில் மின்சாரம் தாக்கப்பட்டு பலர் மரணம் அடைந்து வருவது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

Show comments