விநாயகர் ஊர்வலத்தில் பாய்ந்த மின்சாரம்! – விருதுநகரின் இருவர் பலி!

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2022 (11:17 IST)
நேற்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட நிலையில் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி இருவர் பலியான சம்பவம் விருதுநகரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் பொது இடங்கள், தெருக்கள், கோவில்களில் விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புரத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சப்பர ஊர்வலம் நடைபெற்றது. பல தெருக்களின் வழியாக விநாயகர் சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

அப்போது பேருந்து நிலையம் குலாவர் தெரு அருகே வளைவில் திரும்பியபோது சப்பரம் மரத்தில் மோதியது. இதனால் பின்னால் எடுத்தபோது அங்கிருந்த விளம்பர பலகை சப்பரத்தின் மீது விழுந்தது. அதிலிருந்து பாய்ந்த மின்சாரத்தால் 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் இருவர் உயிரிழந்துவிட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீஸார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! இந்திய வானிலை ஆய்வு மையம்!

கணவர் சரியாக சம்பாதிக்கவில்லை.. 2வது கணவரையும் விவாகரத்து செய்ய முடிவு செய்த பெண்..!

"என் மகனுக்காக" ... புற்றுநோயுடன் போராடிய தந்தை மகனுக்கு எழுதிய கடைசி கடிதம்..!

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 62 வயது நபர்.. நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் தற்கொலை..!

தீபாவளிக்கு அறிமுகமான கார்பைடு கன் ஏற்படுத்திய விபத்து: 14 சிறுவர்கள் பார்வை இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments