Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டசபையில் தினகரனை வரவேற்ற அதிமுக எம்எல்ஏக்கள்: அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி!

Webdunia
திங்கள், 8 ஜனவரி 2018 (13:09 IST)
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் இன்று முதன் முறையாக தமிழக சட்டசபை கூட்டத்துக்கு சென்றார். டிடிவி தினகரன் தனி நபராக முதன் முதலாக சட்டசபைக்கு செல்வதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

 
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கூடிய அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எம்எல்ஏக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியதாக தகவல்கள் வருகிறது. அதில் சட்டசபைக்கு வர உள்ள தினகரனிடம் யாரும் பேசக்கூடாது, அவரை பார்த்து சிரிக்க கூடாது என பல கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டதாக தகவல்கள் வந்தன.
 
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக இரண்டு எம்எல்ஏக்கள் செயல்பட்டுள்ளனர். சட்டசபையில் தினகரனுக்கு 148-ஆம் எண் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் சட்டசபைக்கு வந்ததும், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் இரத்தினசபாபதி மற்றும் கலைச்செல்வன் ஆகியோர் அவரை வரவேற்று இருக்கையில் அமர வைத்தனர்.
 
இவர்கள் இருவரும் ஏற்கனவே வெளிப்படையாக எடப்பாடி அரசு மீது நம்பிக்கை இல்லை என ஆளுநரிடம் கடிதம் அளித்தவர்கள். இருப்பினும் இவர்கள் இருவர் மீதும் சபாநாயகர் தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் அதிமுக எம்எல்ஏக்களாக இன்னமும் தொடர்கிறார்கள். இவர்கள் இருவரும் தினகரனை வரவேற்று இருக்கையில் அமர வைத்தது எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments