மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் தவெகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வக்பு சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்த சட்டத்திருத்தம் அரசியலமைப்பின் மாண்மை கேள்வி உள்ளாக்குவதாக தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இன்று மத்திய அரசின் வக்பு சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் தவெகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பனையூரில் தவெகவினர் போராட்டம் நடத்த திரண்ட நிலையில் அதற்கு போலீஸார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது சென்னையில் பனையூரில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என் ஆனந்த் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் தமிழ்நாடு முஸ்லீம் லீக் அமைப்பினரும் கலந்துக் கொண்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தவெக மாவட்ட செயலாளர்கள் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர்.
Edit by Prasanth.K