Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தள்ளிப்போகிறதா த.வெ.க விக்கிரவாண்டி மாநாடு? அனுமதி கிடைத்தும் என்ன பிரச்சனை?

Siva
திங்கள், 9 செப்டம்பர் 2024 (14:54 IST)
விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த மாநாட்டிற்கான காவல்துறை அனுமதி கிடைத்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நடத்த போராடி அனுமதி பெற்றாலும் செப்டம்பர் 23ஆம் தேதிக்கு இன்னும் குறுகிய காலமே இருப்பதால் மாவட்ட அளவில் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை நடத்தி ஆட்களை அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதல் மாநாட்டில் அதிக தொண்டர்களை திரட்ட முடிவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை, அதற்கான ஏற்பாடுகளை செய்ய கால அவகாசம் வேண்டும் என்பதால் மாநாட்டு தேதியை ஒரு சில நாட்கள்  தள்ளிப்போக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மாநாடு சிறப்பாக அமைய வேண்டும், அகில இந்திய அளவில் தலைவர்களை மாநாட்டில் பங்கேற்க அழைக்க வேண்டும், அவர்களுடைய தேதி கிடைக்க வேண்டும் போன்ற பிரச்சனைகள் இருப்பதால் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு ஒரு சில நாட்கள் தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக அக்கட்சியின் வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் குகி - மெய்தேய் மீண்டும் மோதல்: டிரோன், ராக்கெட் லாஞ்சர்கள் கிடைத்தது எப்படி?

மேற்குவங்க மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் கெடு.! நாளை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப உத்தரவு.!!

கமலா ஹாரிசுக்கு ஆதரவாக ஆர்.ஆர்.ஆர் படத்தின் ’நாட்டு நாட்டு’ பாடல்.. நாளை நேரடி விவாதம்..!

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 2874.26 கோடி மதிப்பீட்டில் கடன் உதவி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments