1000-க்கு மேல் மது குடித்தால் ஃப்ரிட்ஜ், எல்இடி டிவி பரிசு: சென்னையில் பகீர்!!

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2018 (13:27 IST)
சென்னையில் தீபாவளியை முன்னிட்டு 1000-க்கு மேல் மது குடித்தால் ஃப்ரிட்ஜ், எல்இடி டிவி பரிசு என்று பிளக்ஸ் அடித்து விளம்பரப்படுத்திய பார் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக்கில் குடிமகன்கள் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது. வருடாவருடம் தீபாவளியன்று டாஸ்காக் கலெக்‌ஷனில் பல கோடிகளில் புரளும் தமிழக அரசு இந்த தீபாவளிக்கும் டார்க்கெட் ஃபிக்ஸ் பண்ணியுள்ளார்களாம்.
 
இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டாஸ்மாக் கடையின் விளம்பரம் பலரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அந்த விளம்பர பேனரில் 1000-க்கு மேல் மது அருந்தினால் ஃப்ரிட்ஜ், எல்இடி டிவி, வாஷிங் மெஷின் பரிசு என அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இதனைப் பார்த்த குடிமகன்கள் ஆயிரம் ரூபாய்க்கு குடித்துவிட்டு, ரோட்டில் செல்வோரை வம்பிழுத்துக் கொண்டிருந்தனர். இதுகுறித்து போலீஸாருக்கு தெரியவரவே அவர்கள் பாரின் மேலாளரை கைது செய்தனர். மேலும் பாரிலிருந்த பரிசுப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட மாநில தேர்தலின்போது, தமிழர்களுக்கு எதிராக பேசுவது பாஜகவின் வழக்கம்.. கனிமொழி

டிரம்ப் பெயரில் போலி ஆதார் அட்டை தயாரித்த எம்எல்ஏ.. காவல்துறை வழக்குப்பதிவு

மாதவிடாயை நிரூபிக்க சானிட்டரி நாப்கின்களை காட்டு.. அடாவடி செய்த 2 மேற்பார்வையாளர்கள் மீது வழக்கு!

மேயர் மற்றும் மேயரின் கணவர் இரட்டை கொலை வழக்கு: 5 பேருக்குத் தூக்கு தண்டனை!

மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப்.. HP, Dell, மற்றும் Acer நிறுவனங்களுடன் ஒப்பந்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments