Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி ஆதாரவாளர்கள் என யாரும் இல்லை; டிவி சேனல்களுக்கு ரசிகர்மன்ற நிர்வாகி கோரிக்கை

Webdunia
சனி, 6 ஜனவரி 2018 (16:20 IST)
தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் தனிநபர் யாரையும் ரஜினி ரசிகர் என்று குறிப்பிட வேண்டாம் என்று ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 
ரஜினிகாந்த தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று கடந்த மாதம் 31ஆம் தேதி அறிவித்தார். இதையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் ரஜினி அரசியல் குறித்து பல விவாதங்கள் நடைபெற்றது.
 
இதில் ரஜினி ஆதரவாளர் சிலர் கலந்துக்கொண்டு பேசினர். இந்நிலையில் ரசிகர் மன்ற நிர்வாகி இதுகுறித்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு வேண்டுக்கோள் விடுத்து அறிக்கை ஒன்ரை வெளியிட்டுள்ளார். அதில்,
 
சமீப காலமாக தொலைக்காட்சி விவாதங்களில் ரஜினி ஆதரவாளர் அல்லது ரஜினி ரசிகர் என்று சிலர் பங்கேற்று தங்கள் சொந்த கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றம் மற்றும் மக்கள் மன்றம் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க யாரையும் நாங்கள் நியமிக்கவில்லை. 
 
மன்றத்தின் உறுப்பினர்கள் யாரும் இப்படிப்பட்ட விவாதங்களில் பங்கேற்க எங்களால் நியமனம் செய்யப்படவில்லை என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்து கொள்கிறோம். தலைவர் ரஜினிகாந்த் பெயரில் அனுமதிக்கப்படாத யாரும் இந்த விவாதத்தில் பங்கேற்பது முறையல்ல என்பதால் தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள் ரஜினி ஆதரவாளர் என யாரையும் சித்தரிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்பிஏ நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண்.. மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது..!

சசிகலா, தினகரன், ஓபிஎஸ் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர வாய்ப்பே இல்லை: ஈபிஎஸ் உறுதி

வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு.. விஜய்யின் காட்டமான அறிக்கை..!

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments