Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுக தலைவர் கருணாநிதியின் முரட்டு பக்தர் என்.பெரியசாமி மரணம்!

திமுக தலைவர் கருணாநிதியின் முரட்டு பக்தர் என்.பெரியசாமி மரணம்!

திமுக தலைவர் கருணாநிதியின் முரட்டு பக்தர் என்.பெரியசாமி மரணம்!
, வெள்ளி, 26 மே 2017 (09:56 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் முரட்டு பக்தர் என அழைக்கப்படும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.


 
 
தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக உள்ள என்.பெரியசாமி கடந்த 30 வருடங்களாக மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏ கீதா ஜீவனின் தந்தை. கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த என்.பெரியசாமி சென்னையில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.
 
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் இன்று காலை பிரிந்தது. அவரது பூத உடல் இன்று இரவு சொந்த ஊரான தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்படும். என்.பெரியசாமியின் மறைவிற்கு திமுக தலைமைக்கழகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
 
என்.பெரியசாமிக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மூன்று நாட்கள் திமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் திமுக சார்பில் நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுவதாகவும் திமுக அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவாதி கொலை வழக்கில் தீவிரவாத இயக்கங்களுக்கு தொடர்பு?: மீண்டும் கிளம்பும் சர்ச்சை!