நாளை-நாளை மறுநாள் தேர்வு ஒத்திவைப்பு; 2 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

Webdunia
ஞாயிறு, 1 டிசம்பர் 2019 (18:25 IST)
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக சென்னையில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை நாளையும் நாளை மறுநாளும் நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம், சென்னை வானிலை ஆய்வு மையம் ஆகியவை உறுதி செய்துள்ளன
 
இந்த நிலையில் நாளையும் நாளை மறுநாள் நடைபெற இருந்த கேங்மேன் நேர்முகத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக இந்த அறிவிப்பு என மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளதோடு, இந்த நேர்முகத்தேர்வின் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளது.
 
மேலும் நாளை தூத்துகுடி, மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என தூத்துகுடி மாவட்ட ஆட்சி தலைவரும், நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கடலூர் மாவட்ட ஆட்சி தலைவரும் அறிவித்துள்ளனர். 
 
இதனையடுத்து மேலும் சில மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இன்று இணைகிறார் செங்கோட்டையன்.. அவருடன் இணைவது யார் யார்?

60 மணி நேரத்தில் புயலாக வலுவடையும் காற்றழுத்த தாழ்வு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

பணியில் இருந்த சிறப்பு காவல் படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!

வங்கக்கடலில் புயல் எதிரொலி: 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு..!

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: 500 வீரர்களை அனுப்ப டிரம்ப் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments