Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 வயது குழந்தையை தாக்கிய கொடூர தாய் கைது!

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (08:11 IST)
2 வயது குழந்தையை தாக்கிய கொடூர தாய் கைது!
இரண்டு வயது குழந்தையை கொடூரமாக தாக்கி அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பெண் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்
 
செஞ்சி அருகே துளசி என்ற பெண், பிரேம்குமார் என்பவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தனது இரண்டு வயது குழந்தையை கண்மூடித்தனமாக தாக்கினர். இதனை அவர் வீடியோவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரல் ஆன நிலையில் காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து துளசியை தேடிவந்தனர் 
இந்த நிலையில் தனிப்படை போலீசார் ஆந்திராவில் துளசியை கைது செய்து அவரிடம் வாக்குமூலம் பெற்றதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த வாக்குமூலத்தில் அவர் பிரேம்குமார் என்பவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஆத்திரத்தில் குழந்தையை அடிப்பதாக கூறி உள்ளார் 
 
இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த நிலையில் குழந்தையை தாக்கிய வீடியோவை சமூக வலைத் தளங்களில் யாரும் பகிர வேண்டாம் என குழந்தைகள் நல ஆணையம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமானத்தை கடத்த முயன்ற பயணி.. நடுவானில் சுட்டுக்கொலை.. பெரும் பரபரப்பு..!

வக்ஃப் வாரிய சட்டத்திற்கு எதிராக கடையடைப்பு! வெறிச்சோடிய சாலைகள்!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரு சவரன் விலை ரூ.72,000ஐ நெருங்குவதால் பரபரப்பு..!

மீண்டும் மீண்டும் அண்ணா பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல்.. முடிவே இல்லையா?

நிர்மலா சீதாராமனிடம் கேள்வி கேட்ட ஓட்டல் அதிபருக்கு பதவி.. முதல்வர் வழங்கினார்.

அடுத்த கட்டுரையில்
Show comments