Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் செலவு யார் செய்வது? -தினகரனுக்கு ஷாக் கொடுத்த எம்.எல்.ஏக்கள்

Webdunia
சனி, 27 அக்டோபர் 2018 (13:56 IST)
18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு தினகரன் கூடாரத்தை அதிகமாகவே அசைத்து பார்த்துள்ளது.

 
18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் பதவி தகுதி நீக்கம் செய்தது செல்லும் என 3வது நீதிபதி சத்தியநாராயணன் சமீபத்தில் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கினார். இதனால் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களும் பதவி இழந்தனர். அதிமுக ஆட்சியும் இப்போதைக்கு எந்த ஆபத்தும் இன்றி தப்பியது.
 
நேற்று தினகரன் தலைமையில் தகுதி இழந்த 18 எம்.எல்.ஏக்கள் மதுரையில் ஆலோசனை செய்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் 18 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் தேர்தலை சந்திப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
 
இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் வரும் 30-ஆம் தேதி உயர்நீதிமன்றத்தின் 3-ஆவது நீதிபதி சத்தியநாராயணாவின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தினகரன் ஆதரவாளரும் தகுதி இழந்த எம்.எல்.ஏக்களின் ஒருவருமான தங்கத்தமிழ்ச்செல்வன் அறிவித்துள்ளார்.
 
மதுரையில் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை செய்த தினகரன், மேல்முறையீடு அல்லது தேர்தலை சந்திப்பது என 2 வழிகள் இருக்கிறது. உங்கள் கருத்து எதுவாக இருந்தாலும் கூறுங்கள் என கேட்க, தேர்தல் செலவை கட்சி பார்த்துக்கொள்ளும் எனில், எத்தனை தேர்தலையும் நாங்கள் சந்திக்க தயார் என சிலர் கூறினராம். இது கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும், எந்த பதிலையும் கூறாமல் அவர்களை பார்த்து தினகரன் சிரித்ததாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது. 
 
அதாவது, தினகரனை நம்பித்தான் தற்பொது பதவியை இழந்து நிற்கிறோம். இடைத்தேர்தலில் போட்டியிட்டால் மீண்டும் செலவு செய்ய முடியாது. அந்த செலவை தினகரனே ஏற்க வேண்டும் என பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் கருதுவதாக தெரிகிறது. 
 
தினகரன் எப்படி இதை சமாளிப்பார் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. புயல் எச்சரிக்கை தளர்த்தப்பட்டதாக அறிவிப்பு..!

விண்ணில் செலுத்தப்படுகிறது பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்.. கவுண்ட் டவுன் தொடக்கம்..!

திருவனந்தபுரத்தில் இருந்து வந்த 8 லாரிகள்: மீண்டும் கேரளாவுக்கே செல்லும் மருத்துவக் கழிவுகள்

பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் பாப்கார்னுக்கு GST.. கூட்டத்தில் முடிவு

மீண்டும் பணி நீக்கம் செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments