ஓராண்டு சாதனை விழா ; எலிகள் நடத்திய விழா : தினகரன் கிண்டல்

Webdunia
சனி, 24 மார்ச் 2018 (17:06 IST)
முதல்வர் எடப்பாடி தலைமையிலான ஓராண்டு நிறைவு சாதனை விழா பற்றி ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டி.டி.வி தினகரன் கிண்டலடித்துள்ளார்.

 
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி சமீபத்தில் அதிமுக சார்பில் விழா கொண்டாடப்பட்டது.
 
இந்நிலையில், தஞ்சாவூரில் இதுபற்றி இன்று செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது:
 
எடப்பாடி  அரசு நடத்தியது சாதனைக் கூட்டம் இல்லை. சோதனைக் கூட்டம். எலிகள் நடத்திய விழா.  எடப்பாடி ஆட்சியில் மக்களுக்கு எந்த பலனும் இல்லை. ஓ.பி.எஸ் தன்னை யானையாக நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் ஒரு எலி. இவர்களை பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள். கடந்த வருடம் எடப்பாடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஓட்டு போட்டு விட்டு தற்போது சாதனை பற்றி அவர் பேசுவது வேடிக்கையாக உள்ளது.
சில காரணங்களுக்காக எங்கள் ஸ்லீப்பர் செல்கள் வெளியே வராமல் இருக்கிறார்கள். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது அவர்கள் செய்ய வேண்டியதை செய்வார்கள். அதுவரை பொறுமையாக இருப்போம்” என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் சட்டசபைக்கு வரணும்னு ஆசைப்படும் அதிமுக, பாஜக!.. பெரம்பூர் தொகுதியில் நடப்பது என்ன?..

திமுகவுல 4 பேரு!.. முடிவு கட்டுவோம்!.. எடப்பாடி பழனிச்சாமி சூளுரை!...

விஜய்க்கு தேர்தல் ஆணையம் அனுமதி!.. தவெக நிர்வாகிகள் உற்சாகம்!...

50 ஏசிக்கள், 70 மின்விசிறிகள்.. கொரோனா நேரத்தில் கூட ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தாரா அரவிந்த் கெஜ்ரிவால்?

போர் தொடங்கி 4 வாரங்கள் கழித்து திடீரென மோடியிடம் பேசிய டிரம்ப்.. சமாதானப்படுத்தவா?

அடுத்த கட்டுரையில்
Show comments