Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸுக்கு ஏற்பட்ட அதே நிலைமை எடப்பாடிக்கு: தினகரன் முதல்வரா? அதிருப்தியில் அமைச்சர்கள்!

ஓபிஎஸுக்கு ஏற்பட்ட அதே நிலைமை எடப்பாடிக்கு: தினகரன் முதல்வரா? அதிருப்தியில் அமைச்சர்கள்!

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2017 (12:54 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் புதிய முதல்வராக பதவியேற்றார். ஆனால் அதன் பின்னர் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளரான சசிகலா முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டார்.


 
 
இதனையடுத்து சசிகலா முதல்வராவதற்காக ஓபிஎஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி நான் கட்டாயத்தின் பேரில் தான் ராஜினாமா செய்தேன் என கூறினார்.
 
ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல நேரிட்டதால் அவரால் முதல்வராக முடியவில்லை. இதனையடுத்து அவரது ஆதரவாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார். இதன் பின்னர் கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார் சசிகலாவால் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட அவரது அக்கா மகன் டிடிவி தினகரன்.
 
இந்நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டார் டிடிவி தினகரன். பணப்பட்டுவாடா காரணமாக இந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து வருமான வரித்துறையும் ஆளும் கட்சி வட்டாரத்தில் தனது அதிரடியை காட்டி வருகிறது. இந்த சூழலில் சசிகலா ஓபிஎஸ்-ஸை ராஜினாமா செய்ய வைத்து முதல்வராக முயன்றது போல, தினகரனும் முதல்வர் பதவிக்கு முயன்று வருவதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஏற்கனவே தினகரன் மீது அமைச்சர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், தற்போது அவர் முதல்வராக முயன்று வருவதால் அதிருப்தியில் உள்ள 5 அமைச்சர்கள் ஓபிஎஸ் அணிக்கு தாவ தயாராக உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments