குருட்டு யோகத்தில் தவழ்ந்து வந்து... ஈபிஎஸ்-ஐ கலாய்த்த டிடிவி!

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (11:25 IST)
குருட்டு யோகத்தில் தவழ்ந்து வந்து பதவி பெற்றவர் பழனிசாமி என டிடிவி தினகரன் பேட்டி. 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையான நிலையில் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டபின் நேற்று பெங்களூரிலிருந்து சென்னை வந்தடைந்தார். வரும் வழியில் அவருக்கு ஏராளமான அமமுகவினர் வரவேற்பு அளித்தனர்.
 
இந்நிலையில் சென்னை வந்ததும் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, 24 மணி நேரம் பயணம் செய்ததில் சசிகலா உடல் நிலையில் எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் நன்றாக இருக்கிறார்கள்.
 
மக்கள் மனதில் சசிகலா எந்த தவறும் செய்யவில்லை என்பதுதான் இருக்கிறது, அதற்கு சாட்சிதான் இந்த இருபத்தி நான்கு மணி நேர வரவேற்பு. எங்களைப் பார்த்து, முதலமைச்சர், துணை முதலமைச்சர் பயப்படவேண்டாம் நாங்கள் அவர்களைப் போல் குறுக்கு வழியில் செல்ல மாட்டோம். 
 
ஆளுமை என்கிற வார்த்தைக்கே அதிமுகவில் இடமில்லை. குருட்டு யோகத்தில் தவழ்ந்து வந்து பதவி பெற்றவர் பழனிசாமி. ஜெயலலிதா நினைவிடத்தை திறந்தவுடன் சசிகலா அங்கு செல்வார் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

பல அலுவலர்களுக்கு SIR செயலியை இயக்க தெரியவில்லை.. செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments