தினகரனின் ஃபோகஸ் கவுன்சிலர் பதவி: ஃபுல் ஸ்விங்கில் தொண்டர்கள்!

Webdunia
புதன், 28 ஆகஸ்ட் 2019 (17:07 IST)
டிடிவி தினகரன் உள்ளாட்சி தேர்தலுக்காக ஃபுல் ஸ்விங்கில் தனது தொண்டர்கள் அனைவரையும் களமிறக்கவுள்ளாராம். 
 
அதிமுக பிளவு, சசிகலா தண்டனை ஆகியவற்றால் புதிதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கினார் தினகரன். தனது ஆதரவாளர்களுடன் ராஜாவாக இருந்த தினகரன் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஆளும்கட்சி, திமுக ஆகியவற்றைத் தோற்கடித்து நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்தார். 
 
ஆனால் அதன் பின்னர் அடுத்தடுத்து எடுத்த நடவடிக்கைகளால் அவரது கட்சியினரே அதிருப்தியில் உள்ளனர். பலர் கட்சியை விட்டு விலகி வேறு கட்சிகளுக்கு சென்றுவிட்டனர். மக்களவை மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் அமமுகவுக்குப் பேரிடியாக விழுந்துள்ளது.
ஆனால் தற்போது அவர் இந்த தோல்விகளில் இருந்து மீண்டெழுந்து அடுத்த கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஆம், உள்ளாட்சி தேர்தலுக்கான வியூகங்களை அமைத்து தொண்டர்களை களமிறக்கியுள்ளாராம். 
 
அதிலும் குறிப்பாக இடைத்தேர்தல் மற்றும் மக்களவைத்தேர்தலில் அமமுக எந்தெந்த தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றதோ அந்த தொகுதிகள் மீது உள்ளாட்சி தேர்தலில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், அந்த தொகுதியில் கவுன்சிலர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்றும் மும்முறமாக செயல்ப்பட்டு வருகிறாராம். 
 
அந்த வகையில், சிவகங்கை, தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் உள்பட தென் மாவட்டங்களையும், தஞ்சை, திருச்சி ஆகிய டெல்டா மாவட்டங்களும் தினகரனின் ஃபோகஸில் உள்ள தொகுதிகளாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி ஒரு பெரிய தலைவர் இல்லை.. அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை: செங்கோட்டையன்

தொடர் கனமழை எதிரொலி.. மரம் விழுந்து பள்ளி சுவர் சேதம்.. OMR சாலையில் போக்குவரத்து நெரிசல்..

திமுக எங்களுக்கு எதிரி இல்லை!.. திடீர் டிவிஸ்ட் கொடுத்த ஆதவ் அர்ஜுனா!..

திடீரென சென்னையை நோக்கி நகரும் மேகக் கூட்டங்கள்! அடுத்த 2 மணி நேரத்துக்கு எச்சரிக்கை:

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ். ரூ.468 பத்திரங்கள் விவகாரமா?

அடுத்த கட்டுரையில்
Show comments