Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரன் தொடங்கும் கட்சியின் பெயர் ‘அதிமுக’? - இது என்ன கலாட்டா?

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2018 (17:43 IST)
ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, ஒரு புதிய கட்சியை தினகரன் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதேபோல், திமுக வேட்பாளர் மதுசூதனன் 24,651 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததோடு டெபாசிட் இழந்தார்.
 
மேலும், மக்களிடம் தனக்கு மவுசு இருப்பதையும், அதிமுக இன்னும் தன் பக்கமே இருக்கிறது எனவும் அவர் காட்டியுள்ளார். எனவே, பல அதிமுக நிர்வாகிகள் தினகரன் பக்கம் சாயும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு, அதை தடுக்கும் வகையில் இதுவரை 100க்கும் மேற்பட்ட தினகரனின் ஆதரவாளர்களை நீக்கியுள்ளனர். 
 
எனவே, அவர்களை ஒருங்கிணைக்கும் வகையிலும், அவர்களுக்கு மீண்டும் பதவிகள் கொடுக்கும் வகையிலும், டிடிவி தினகரன் ஒரு பேரவையை தொடங்க இருக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. 
 
இந்நிலையில், புத்தாண்டு விருந்தாக தனது ஆதரவாளர்களுக்கு சர்ப்பரைஸ் கொடுக்க நினைத்த தினகரன், தான் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக அறிவிக்க உள்ளராம். இது தொடர்பான ஆலோசானையில் அவர் தற்போது ஈடுபட்டுள்ளார். அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என தொடங்கும் திட்டம் இருக்கிறதாம். இதை சுருக்கினாலும் அதிமுக என்றுதான் வருகிறது. எனவே, இது தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் தினகரன் விவாதித்து வருகிறாராம். 
 
அது சரி வரவில்லை எனில் வேறு பெயர் பரீசிலிக்கப்படும் எனத் தெரிகிறது. எப்படி பார்த்தாலும், தனது கட்சியில் அதிமுக வர வேண்டும் என்பதில் தினகரன் உறுதியாக உள்ளாராம்.
 
அரசியலில் இறங்கவுள்ளதாக ரஜினிகாந்த் அறிவித்து விட்ட நிலையில், அவரை முந்திக்கொள்ள வேண்டும் என தினகரன் நினைக்கிறாராம். எனவே, தினகரன் தொடங்கும் புதிய அரசியல் கட்சியின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments