Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசன் பேச்சைக் கேட்டால் சிரிப்புதான் வருகிறது: டிடிவி தினகரன்

Webdunia
வியாழன், 23 பிப்ரவரி 2023 (14:58 IST)
கமல்ஹாசனின் பேச்சைக் கேட்கும்போது சிரிப்புதான் வருகிறது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  ஸ்வரூபம் பிரச்சனை குறித்து சமீபத்தில் கமல்ஹாசன் ஈரோடு கிழக்கு தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. விஸ்பரூபம் படத்தின் பிரச்சனையின் போது அந்த பிரச்சனையை சமூகமாக முடித்துக் கொடுத்த அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி கூறி ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவர் ஜெயலலிதாவை குறை கூறும் வகையில் பிரச்சாரம் செய்தது அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. 
 
இதுகுறித்து டிடிவி தினகரன் கூறிய போது விஸ்வரூபம் பிரச்சனையின் போது ஜெயலலிதா அம்மாவுக்கு நன்றி கூறி கமல்ஹாசன் எழுதிய லெட்டர் சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதிலிருந்து அவர் தேர்ந்த அரசியல்வாதியாக மாறிவிட்டார் என்று தெரிகிறது. 
 
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரே ஒரு எம்பி சீட் வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சியையும்  முதலமைச்சரையும் அவர் திருப்தி செய்வதற்காக இவ்வாறு பேசி உள்ளார் என்று கூறினார். மேலும் கமலஹாசன் பேசுவதை எல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் பேசுவதை கேட்கும் போது சிரிப்புதான் வருகிறது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார். டிடிவி தினகரன் இந்த பேட்டி பரபரப்பு உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?

வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம்! - நீதிமன்றம் உத்தரவு!

பாமகவில் வெடித்த மோதல்? மேடையிலேயே ராமதாஸ் - அன்புமணி வாக்குவாதம்! - என்ன நடந்தது?

இன்றைக்கும்.. என்றைக்கும்.. நீ எங்கள் நெஞ்சத்தில்..! - கேப்டன் விஜயகாந்திற்கு மு.க.ஸ்டாலின், கமல், ரஜினி நினைவஞ்சலி!

மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடக்கம்! - பின் தொடரும் காங்கிரஸ் பிரமுகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments