Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை இலை வழக்கில் தினகரன் விடுவிப்பு? - குற்றப்பத்திரிக்கையில் பெயர் இல்லை

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2017 (11:56 IST)
இரட்டை இலையை சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில் திடீர் திருப்பமாக, டெல்லி போலீசார் தயாரித்துள்ள குற்றப்பத்திரிக்கையில் தினகரனின் பெயர் இல்லை என்பது தெரியவந்துள்ளது. 


 

 
தேர்தல் கமிஷனால்  முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்க, டெல்லியை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர்  என்பவரிடம் தினகரன் தரப்பு ரூ.10 கோடி பேரம் பேசியதாகவும், ரூ.1.5 கோடி முன்பணமாக கொடுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
 
இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் சுகேஷ் சந்திரசேகரை கைது செய்தனர். மேலும், டிடிவி தினகரன் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பின் சென்னை வந்து தினகரனிடம் விசாரணை நடத்தினர். அதன் பின் ஏப்ரல் 26ம் தேதி தினகரனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 42 நாட்கள் சிறைவாசத்திற்கு பின் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
 
இந்நிலையில், திடீர் திருப்பமாக இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையில் தினகரன் பெயர் இல்லை எனவும் போதிய ஆதரம் இல்லை என்பதால், குற்றப்பத்திரிக்கையில் தினகரனின் பெயர் டெல்லி போலீசார் சேர்க்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
 
எனவே, இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்படுவார் எனத் தெரிகிறது. இந்த செய்தி தினகரன் ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments