Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரன் தீவிர ஆலோசனை ; ஆட்சி நீடிக்குமா? கவிழுமா?

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (14:01 IST)
அதிமுகவின் இரு அணிகளும் இணைய உள்ள பரபரப்பான சூழலில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தன்னுடைய ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.


 

 
தினகரனை நீக்கியதை போல், அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கி உத்தரவிட்ட பின்புதான் நாங்கள் தலைமை அலுவலகத்திற்கு வருவோம் என ஓ.பி.எஸ் அணி திடீர் நிபந்தனை விதித்தது. அதனால் இரு அணிகளும் இன்று இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
 
அந்நிலையில், ஓ.பி.எஸ் அணியின் கோரிக்கையை ஏற்று சசிகலாவை நீக்கும் தீர்மானம் தயாரிக்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது. ஆனால், அவரை நீக்க எதிர்ப்பு தெரிவித்து 3 அமைச்சர்கள் தீர்மானத்தில் கையெழுத்திட மறுப்பதாக தெரிகிறது. அந்த 3 அமைச்சர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்டோர் இறங்கியுள்ளதாக தெரிகிறது. 
 
அதேநேரம், அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் தனது ஆதரவாளர்களுடன் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். சசிலாவை நீக்கினால் அடுத்த என்ன மாதிரியான சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது என அவர் விவாதித்து வருவதாக தெரிகிறது. தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் 20 எம்.எல்.ஏக்களில் 17 எம்.எல்.ஏக்கள் எந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவார்கள் எனத் தெரிகிறது. 


 

 
தற்போது எடப்பாடி பழனிச்சாமி அணி, ஓ.பி.எஸ் அணி  பக்கம்  உள்ள எம்.எல்.ஏக்கள் மற்றும் சபாநாயகரோடு சேர்த்து 119 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். ஆட்சி அமைக்க 117 எம்.எல்.ஏக்கள் வேண்டும். அந்த 119 எம்.எல்.ஏக்களில் 3 பேர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களாக இருப்பவர்கள். எனவே, அவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற்றால் ஆட்சி கவிழும் நிலை ஏற்படும் எனத் தெரிகிறது. 
 
ஆளுநர் வித்யாசாகர் ராவ் தற்போது சென்னை வந்துள்ளார். எனவே, எடப்பாடி அணி சசிகலாவை நிக்கி தீர்மானம் நிறைவேற்றினால், ஆட்சியை கவிழ்க்கும் நிலையை தினகரன் எடுப்பாரா அல்லது சட்டரீதியான நடவடிக்கைகளில் மட்டும் ஈடுபடுவாரா என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும். 

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments