Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலியாகும் அடுத்த விக்கெட்... உஷாரான தினகரன் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்!

Webdunia
திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (15:31 IST)
அமமுகவில் இருந்து தருமபுரி பழனியப்பன் விலக உள்ளார் என பேச்சு எழுந்த நிலையில் டிடிவி தினகரன் சில திரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளாராம். 
 
அதிமுக பிளவு, சசிகலா தண்டனை ஆகியவற்றால் புதிதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கினார் தினகரன். தனது ஆதரவாளர்களுடன் ராஜாவாக இருந்த தினகரன்  ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஆளும்கட்சி, திமுக ஆகியவற்றைத் தோற்கடித்து நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்தார். 
 
ஆனால் அதன் பின்னர் அடுத்தடுத்து எடுத்த நடவடிக்கைகளால் அவரது கட்சியினரே அதிருப்தியில் உள்ளனர். பலர் கட்சியை விட்டு விலகி வேறு கட்சிகளுக்கு சென்றுவிட்டனர். மக்களவை மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் அமமுகவுக்குப் பேரிடியாக விழுந்துள்ளது.
டிடிவி தினகரன் மேல் எழுந்த அதிருப்தியால் செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா ஆகியோர் கட்சி மாறிய நிலையில் இது அமுமுகவின் பெறும் சரிவாக பார்க்கப்படுகிறது. 
 
அதுமட்டுமல்லாமல் கீழ்மட்டத்தில் உள்ள தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சிலரும் கட்சியில் இருந்து விலகி மற்றக் கட்சிகளில் சேர்ந்து வருவதால் கட்சியே காணமால் போய்விடும் போல் தெரிகிறது. 
இந்நிலையில், தருமபுரி பழனியப்பம் தனது வீட்டு நிக்ழ்ச்சிக்கும் திமுக மற்றும் அதிமுகவினரை அழைத்து உபசரித்ததாக தினகரன் காதுகளுக்கு செய்தி சென்றுள்ளது. மேலும், கட்சி மாறும் யோசனியில் அவர் இருப்பதாகவும் தினகரனிடம் தெரிவிக்கப்பட்டதாம். 
 
உடனே தினகரன் தாமதிக்காமல் தருமபுரி பழனியப்பனை அழைத்து இது குறித்து விசாரித்தாராம், பழனியப்பனோ இதற்கு பதில் அளிக்க இருப்பினும் பழனியப்பன் மீது ஒரு கண் வைக்க்கும்படி அறிவுறுத்தியுள்ளாராம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments