தன்னை டெல்லி போலீசார் தன்னை கைது செய்தது பற்றி, அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில், 4 நாள் விசாரணைக்குப் பின் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சென்னை அழைத்து வந்து மீண்டும் விசாரிக்க டெல்லி போலீசார் முடிவெடுத்துள்ளனர்.
இதற்காக தினகரன் மற்றும் டெல்லி போலீசார் இன்று காலை டெல்லி விமான நிலையத்திற்திற்கு வந்தனர். அப்போது, தினகரனிடம் அங்கிருந்த நிருபர்கள் நீங்கள் ஏதும் பேச விரும்புகிறீர்களா எனக் கேட்டனர். அதற்கு ‘ இல்லை’ என தினகரன் கூறினார். அதன்பின் ஒரு நிருபர் ‘இது அரசியல் சதியா?” எனக் கேட்க “நான் உங்களிடம் பிறகு பேசுகிறேன்” எனக் கூறினார்.
வழக்கமாக, செய்தியாளர்களிடம், இனிமையான முகத்துடன் நிறைய நேரம் பேசும் தினகரன், தற்போது ஒரீரு வார்த்தையில் மட்டுமே பதிலளித்தார்.
#WATCH: TTV Dinakaran being taken to Chennai by Delhi Crime Branch officials for probe in AIADMK symbol case, says- "I'll talk to you later" pic.twitter.com/5JleKYkgiv