Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேகேதாட்டு பகுதியில் புதிய அணை, தமிழக அரசு தடுக்க டிடிவி வேண்டுகோள்

Webdunia
புதன், 26 மே 2021 (08:45 IST)
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில் புதிய அணைக்கான கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என டிடிவி.தினகரன் வேண்டுகோள். 

 
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, மேகேதாட்டு பகுதியில் காவிரியின் குறுக்கே புதிய அணைக்கான கட்டுமானப்  பணிகளை கர்நாடக அரசு தொடங்கியிருப்பதாக வரும் செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன.மத்திய அரசின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இப்பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
 
மேகேதாட்டுவில் கர்நாடகா அணை கட்டிவிட்டால் காவிரியில் துளி தண்ணீர் கூட தமிழகத்திற்கு வராமல் போய்விடும். காவிரி டெல்டா பகுதி மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் முக்கால்வாசி பகுதிகள் குடிநீருக்காக காவிரி நீரை தான் நம்பி இருக்கின்றன.
ஏற்கனவே தி.மு.க ஆட்சிக் காலங்களில் தான் காவிரி உள்ளிட்ட நதிநீர் பிரச்னைகளில் தமிழகம் தன்னுடைய உரிமையை கோட்டைவிட்டு  நின்றது.

இப்போதும் அப்படி நடந்து விடக்கூடாது. எனவே, தமிழகத்தின் ஆட்சி பொறுப்பு மட்டுமல்லாமல், அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வைத்துள்ள தி.மு.க உடனடியாக செயல்பட்டு, மேகேதாட்டு அணை கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments