Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமமுக பொதுச்செயலாளராக டிடிவி. தினகரன் மீண்டும் தேர்வு

Webdunia
ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (14:40 IST)
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் டிடிவி. தினகரன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவர்களது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அம்மா முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.

சமீபத்தில், அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தினகரனை நேரில் சந்தித்து அவருடன் இணைந்து பணியாற்றப் போவதாக இருவரும் கூட்டாக அறிவித்தனர்.

இந்த நிலையில், இன்று சென்னை அடுத்த வானகரத்தில் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் அமமுகவின் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் துணைத்தலைவர் எஸ்.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில், பொதுச்செயலாளர் தினகரன், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்ட நிலையில்,  பொதுச்செயலாளர், தலைவர், துணைதலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.

இதில், அமமுக பொதுச்செயலாளராக டிடிவி. தினகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான சான்றிதழ்ல் அவருக்கு வழங்கப்பட்டது. அமமுக தலைவராக முன்னாள் எம்.பி. கோபால் நியமிக்கப்பட்டுள்ளார். வி.கே.சசிக்கலாவுக்கான நீண்ட நாட்களாக இப்பதவி காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. துணைத்தலைவராக அன்பழகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை சந்திக்கும் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ்.. யார் முதல்வர்?

நெல்லையை அடுத்து மதுரையில்.. அதிமுக ஆய்வுக்குழு கூட்டத்தில் அடிதடி..!

சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை..!

தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்.. அர்ஜூன் சம்பத் பேச்சு

வானத்திற்கும் பூமிக்கும் முழங்கிய ஸ்டாலின் ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள்: என்ன பதில்? ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments