Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து: காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ. உத்தரவு

Webdunia
சனி, 7 அக்டோபர் 2023 (10:42 IST)
டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ. உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே 2033ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி வரை டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
காஞ்சிபுரத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய விவகாரத்தில் கைதாகி புழல் சிறையில் டி.டி.எஃப் வாசன் உள்ளார் 
 
இதேபோல தொடர்ந்து அதிவேகமாக வாகனங்களை ஓட்டி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதால் ஓட்டுநர் ஒரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல யூடியூபர் டி.டி.எஃப் வாசன், ஆபத்தான முறையில் பைக் ஓட்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே இரண்டு முறை அவருடைய ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் டி.டி.எஃப்  வாசன் தரப்பிலிருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
 
மேலும் விளம்பரத்திற்காக நடத்தி வரும் டி.டி.எஃப் வாசனின் யூடியூப் சேனலை மூட வேண்டும் எனவும், டிடிஎப் வாசன் பைக்கை எரித்து விட வேண்டும் என்றும்  டிடிஎஃப் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது நீதிபதி காட்டமாக தெரிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments