Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீமானால் எனது உயிருக்கு ஆபத்து: நீதிமன்றத்தில் திருச்சி சூர்யா மனுதாக்கல்..!

Mahendran
செவ்வாய், 5 நவம்பர் 2024 (15:29 IST)
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானால் தனது உயிருக்கு ஆபத்து எனக் கூறி திருச்சி சிவா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
திருச்சி சூர்யா, மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் ஆகியோரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கோரிக்கை வைத்துள்ளார். 
 
சாட்டை துரைமுருகன் தனக்கு மிரட்டலாக வீடியோக்களை பதிவு செய்து வருகிறார் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். சீமான் குறித்து 15 ஆடியோ பதிவுகள் செய்ததால் பழிவாங்கும் நோக்கத்துடன் சீமான் தரப்பினர் செயல்படுகின்றனர் என்றும் திருச்சி சூர்யா குறிப்பிட்டுள்ளார். 
 
இந்த மனுவின் விசாரணையை வரும் 7ஆம் தேதிக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் தான் திருச்சி சூர்யா என்பதும், அவர் கடந்த சில ஆண்டுகளாக பாஜகவில் இருந்து அங்கிருந்து வெளியேற்றப்பட்டதும், தற்போது பாஜகவுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எதிராக ஊடகங்களில் பேட்டி அளித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

35 பேரை கொலை செய்த நபருக்கு மரண தண்டனை.. இன்று நிறைவேற்றம்..!

கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை.. குற்றவாளி சஞ்சய் ராய்க்கு என்ன தண்டனை?

வளர்ச்சி வேண்டுமென்றால் சிறிய பாதிப்புகள் வரதான் செய்யும்! - பரந்தூர் விவகாரம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

கழிவு நீர் டேங்கில் விழுந்து சிறுமி பலியான சம்பவம்.. 16 நாட்களுக்குப் பின் பள்ளி திறப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments