திருச்சியில் இலங்கை அகதிகள் தற்கொலை முயற்சி: கலெக்டர் விசாரணை!

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (15:12 IST)
திருச்சியில் இலங்கை அகதிகள் சிலர் திடீரென தற்கொலை முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து இது குறித்து விசாரணை செய்ய திருச்சி மாவட்ட கலெக்டர் இலங்கை அகதிகள் முகாமுக்கு நேரடியாக சென்று உள்ளார் 
 
திருச்சி மன்னார்புரம் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை அகதிகள் பலர் ஒரு சில ஆண்டுகளாக தங்கியுள்ளனர். இவர்களில் ஒரு சிலர் திடீரென இன்று காலை தற்கொலை முயற்சி செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது
 
அவர்கள் தூக்க மாத்திரை சாப்பிட்டும், வயிற்றை கத்தியால் கிழித்தும் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும், தற்கொலை செய்து கொள்ள முயன்றவர்களின் எண்ணிக்கை 15 என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் அகதிகள் முகாமில் உள்ளவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராஜ் அவர்கள் நேரடியாக அகதிகள் முகாமிற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார். அவர்களிடம் உள்ள குறைகள் மற்றும் தற்கொலைக்கான காரணம் என்ன என்று அவர் விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களுக்கு ஒன்னு சொல்றேன்!.. தவெகா போராட்டத்தில் போலீசை சீண்டிய புஸி ஆனந்த்!..

நாளை கன மழை எச்சரிக்கை.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்... எச்சரிக்கை அறிவிப்பு

எஸ்ஐஆர் தொடர்பான கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு.. அதிமுக அறிவிப்பு..!

சென்னையில் 96 என்ற புதிய அரசு பேருந்து.. தாம்பரம் முதல் அடையாறு வரை..!

சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. சுகாதாரத்துறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments