Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும்! – திருச்சி மாவட்ட திமுக தீர்மானம்!

Webdunia
திங்கள், 30 மே 2022 (14:31 IST)
திருச்சி மாவட்ட திமுக ஆலோசனை கூட்டத்தில் உதயநிதியை அமைச்சராக்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவாக உதயநிதி ஸ்டாலின் இருந்து வரும் நிலையில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென திமுக தொண்டர்கள் முதல் அமைச்சர்கள் வரை பலரும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் விழுப்புரத்தில் நடந்த மாவட்ட திமுக ஆலோசனை கூட்டத்தில் கருணாநிதியின் 99வது பிறந்தநாளை கொண்டாடுவது குறித்தும், உதயநிதியை அமைச்சராக்குவது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இன்று திருச்சி தெற்கு திமுக மாவட்ட ஆலோசனை கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கருணாநிதியின் 99வது பிறந்தநாளை கொண்டாடுவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் உதயநிதியை அமைச்சராக்குவது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து மாவட்ட திமுக கூட்டங்களில் உதயநிதி அமைச்சராக வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருவது திமுக வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாறி மாறி தடை செய்யும் இந்திய வங்கதேச அரசுகள்.. பாகிஸ்தானை விட மோசமாகி வரும் நிலைமை..!

இந்தியாவை பகைத்து கொண்டதால் துருக்கி அதிபர் மகளுக்கு ரூ.2500 கோடி நஷ்டமா?

பாம்பு கடித்து ஒருமுறை இருமுறை அல்ல.. 58 முறை இறந்த 2 பேர்.. அதிர்ச்சி தகவல்..!

என் உடம்புல ஓடுறது ரத்தம் இல்ல.. சிந்தூர்..! - பிரதமர் மோடி ஆவேசம்!

போரை நிறுத்தியது இந்தியாதான்! அமெரிக்காவுக்கு வேற வேலையில்ல!?! - ட்ரம்ப்க்கு ஜெய்சங்கர் குட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments