Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்மழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை?

Webdunia
வெள்ளி, 29 நவம்பர் 2019 (07:40 IST)
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் நேற்று இரவு முதல் சென்னை, திருச்சி, அரியலூர், தஞ்சை போன்ற கனமழை பெய்து வருகிறது. இதனை அடுத்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா சற்றுமுன் அறிவிப்பு செய்துள்ளார்.
 
அதேபோல் அரியலூர் மாவட்டத்தை அடுத்து திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். எனவே திருச்சி, அரியலூர் என 2 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிகிறது. குறிப்பாக சென்னையில் இன்று காலை மழை இல்லை என்பதால் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என தெரிகிறது
 
மேலும் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 2 ஆகிய தேதிகளில் சென்னை உள்பட வடமாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்துள்ளதால் நாளை முதல் மூன்று நாட்களுக்கு சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments