Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளிக்கும் பொங்கல் நிலைமை தானா? போராட்டத்தில் குதிக்கும் போக்குவரத்து ஊழியர்கள்?

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2018 (15:06 IST)
கடந்த பொங்கலுக்கு முன்னர் போக்குவரத்து ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்தத்தை போல் தீபாவளிக்கு முன்னதாக அவர்கள் போராட்டத்தில் குதிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கடந்த பொங்கலுக்கு முன்பாக ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை வழங்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். பொங்கல் வரை இதில் அரசுக்கும் ஊழியர்களுக்கும் உடன்பாடு ஏற்படாததால் தற்காலிக ஓட்டுனர்களை வைத்து பேருந்து இயக்கப்பட்டது. இதனால் பல விபத்துக்களும் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டது.
 
இந்த பஸ் ஸ்டிரைக்கால் பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல முடியாமல் மக்கள் தவித்தனர். பின்னர் சில நிபந்தனைகளோடு இந்த போராட்டம் கைவிடப்பட்டது.
 
ஆனால் தற்பொழுது வரை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய ரூ.6,800 கோடி கொடுக்காமல் அரசு காலம்  தாழ்த்தி வருகிறது என ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் ஊழியர்களை பழிவாங்கும் நோக்கில் போடப்பட்ட வழக்குகளை காரணம் காட்டி, தற்காலிக பணி நீக்கம், இடமாற்றம் செய்யப்பட்ட 86 தொழிலாளர்களின் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி 22, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
 
இதனையடுத்து தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம், சி.ஐ.டி.யு. சவுந்தரராஜன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் வேலை நிறுத்தம் குறித்த முடிவை நாளை அறிவிருப்பதாக கூறியுள்ளனர்.
 
ஒருவேளை போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு எப்படி செல்வது என மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்: அதிர்ச்சியில் ஃபாலோயர்கள்

குஷ்பு கைது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments