Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போக்குவரத்து ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

போக்குவரத்து ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு
, செவ்வாய், 30 டிசம்பர் 2014 (14:39 IST)
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் காலவரையற்ற போராட்டம் நடத்தி வரும் நிலையில், 7 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
இது குறித்து, தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகரராவ் உத்தரவை வெளியிட்டுள்ளார்.
 
அந்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:–
 
போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தற்போது 100 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த அகவிலைப் படி 7 சதவீதம் உயர்த்தி வழங்கப்படுகிறது.
 
இதன் மூலம் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 107 சதவீதம் அகவிலைப்படி உயர்வு பெறுவார்கள். இந்த அகவிலைப்படி உயர்வு 1.7.2014 அன்று முதல் முன் தேதியிட்டு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்.
 
இந்த அகவிலைப்படி உயர்வை வழங்குவதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து போக்குவரத்து கழக மண்டல நிர்வாக இயக்குனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இந்த அகவிலைப்படி உயர்வுக்கு தேவையான தொகை அரசிடம் இருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ பெறாமல் தமிழக போக்குவரத்து கழகங்களே பூர்த்தி செய்து கொள்ளும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil