Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நாளை முதல் கூடுதலாக 400 பேருந்துகள்: போக்குவரத்து துறை தகவல்

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (10:52 IST)
சென்னையில் நாளை முதல் 300 முதல் 400 பேருந்துகள் வரை கூடுதலாக இயக்க போவதாக தமிழக அரசு போக்குவரத்துத்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்பாடு காரணமாக பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை என்ற காரணத்தினால் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தி குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:
 
தற்பொழுது தமிழகத்தில்‌ கோவிட்‌ 19 நோய்த்‌ தொற்று அதிகரித்து வருவதை கட்டுப்படுத்துகின்ற வகையில்‌, தமிழக அரசின்‌ சார்பில்‌ பல்வேறு நடவடிக்கைகள்‌ தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில்‌, நேற்றைய தினம்‌ தமிழக அரசின்‌ சார்பில்‌ கூடுதலாக சில கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, உள்ளூர்‌ மற்றும்‌ வெளியூர்‌ பேருந்துகளில்‌ பயணிகள்‌ நின்றுகொண்டு பயணம்‌ செய்திட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
 
மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ இயக்கப்படுகின்ற பேருந்துகளில்‌, பொதுவாக 44 இருக்கை வசதியும்‌, 25 பயணிகள்‌ நின்று கொண்டு பயணம்‌ செய்திட அனுமதிக்கப்பட்டு இருந்தாலும்‌, தற்பொழுது தமிழக அரசால்‌ பேருந்துகளில்‌ நின்று கொண்டு பயணம்‌ செய்திட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்‌, பொதுமக்கள்‌ மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழகப்‌ பேருந்துகளில்‌ சிரமமின்றி பயணம்‌ செய்திட ஏதுவாக, நாளை சனிக்கிழமை முதல்‌, 300 முதல்‌ 400 பேருந்தகள்‌ வரையில்‌ கூடுதலாக இயக்கப்படுகின்றன.
 
குறிப்பாக, பொதுமக்கள்‌ அதிகம்‌ பயணம்‌ செய்கின்ற, செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, தாம்பரம்‌, கேளம்பாக்கம்‌, செம்மஞ்சேரி, பெரும்பாக்கம்‌, மணலி, கண்ணகி நகர்‌, பெரம்பூர்‌, அம்பத்தூர்‌, ஆவடி, திருவொற்றியூர்‌ மற்றும்‌ செங்குன்றம்‌ உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலிருந்து காலை மற்றும்‌ மாலை நெரிசல்‌ நேரங்களில்‌ கூடுதல்‌ பேருந்துகள்‌ இயக்கப்படுகின்றன. பொதுமக்கள்‌ அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி முகக்கவசம்‌ அணிந்து பயணம்‌ செய்யுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments