Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி ரயில் மறியல் முயற்சி! – மதுரையில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2023 (11:33 IST)
வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி ரயில் மறியலில் ஈடுபட முயன்றவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்


 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமாகவும், உசிலம்பட்டி மக்களின் குடிநீர் ஆதராமாகவும் விளங்கும் 58 கிராம கால்வாய் திட்டத்தில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நலையில் 58 கால்வாயில் தண்ணீர் திறக்க  கோரி அனைத்து கள்ளர் கூட்டமைப்பு சார்பாக ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த சூழலில்

இன்று வைகை அணையிலிருந்து  58 கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோஷங்கள் எழுப்பி ரயில் மறியலில் ஈடுபட முயன்ற அனைத்து கள்ளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் மற்றும் அவருடன் நான்கு நிர்வாகிகளை   போலீசார் கைது செய்தனர்.

மேலும் மதுரையில் இருந்து தேனி நோக்கி சென்ற மதுரை போடி ரயில் பாதுகாப்பாக சென்ற நிலையில்  ரயில் மறியல் சம்பவத்திற்காக ரயில்வே பாதுகாப்பு போலீஸார் மற்றும் உசிலம்பட்டி காவல்துறையினர் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments