Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அருகே ரயில் விபத்து - 7 பேர் படுகாயம்

சென்னை அருகே ரயில் விபத்து - 7 பேர் படுகாயம்

Webdunia
வெள்ளி, 6 மே 2016 (02:12 IST)
சென்னை பட்டாபிராம் அருகே ஏற்பட்ட ரயில் விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.


 

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் சென்ற விரைவு ரயில் திருவள்ளூர் அருகே பட்டாபிராம் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது. இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதில் 7 பேர் காயமடைந்தனர். இதனால் இந்த தடத்தில் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
 
சென்னையில் இருந்து, திருவனந்தபுரதிற்கு திருவனந்தபுரம் மெயில் (12623) சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, பட்டாபிராம் ரயில் நிலையம் சென்று கொண்டு இருந்தது.
 
அப்போது, மின்சார ரயில் வந்துள்ளது. இரு ரயில்களும் ஒரு ரயில் தண்டவாளத்தில் வந்ததால்,இரு ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 பயணிகள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த பயணிகளை அருகில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
மேலும், ரயில் விபத்தில் இருந்து மீட்பு பணிகளை அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.  இந்த விபத்து காரணமாக, சென்னை - அரக்கோணம் வழியாக செல்லும் ரயில் சேவை முற்றிலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments