Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிராபிக் ராமசாமி உதவியாளர் மீது மர்ம வாகனம் மோதல் - படுகாயத்துடன் போராடும் பாத்திமா

டிராபிக் ராமசாமி உதவியாளர் மீது மர்ம வாகனம் மோதல் - படுகாயத்துடன் போராடும் பாத்திமா
, செவ்வாய், 2 ஜூன் 2015 (15:07 IST)
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உதவியாளர் பாத்திமா மீது மர்ம வானம் மோதிய விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார்.
 
சமுக சேவகர் டிராபிக் ராமசாமி, இவரது உதவியாளராக இருப்பவர் பாத்திமா (40).  இவர் நேற்று கும்பகோணத்திற்கு சென்றுவிட்டு சென்னைக்கு ஜீப்பில் வந்து கொண்டிருந்தார். நீண்ட பயண களைப்பு காரணமாக, கடலூர் அருகே உள்ள ஆலங்குப்பத்தில் ஜீப்பை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தார்.
 
அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அசுர வேகத்தில் வந்தது. அந்த வாகனம் பாத்திமா ஜீப் மீது பயங்கரமாக மோதிவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்தது. இதில் பாத்திமா படுகாயம் அடைந்தார்.
 
இதனையடுத்து, அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்பு, மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 
இந்த தகவல் அறிந்த, டிராபிக் ராமசாமி சென்னையிலிருந்து புதுவை ஜிப்பர் மருத்துவமனைக்கு சென்று தனது உதவியாளர் பாத்திமாவை பார்த்து ஆறுதல் கூறினார். மேலும், அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
 
அப்போது, இது குறித்து, சமுக சேகவர் டிராபிக் ராமசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
ஆர்.கே.நகர் தொகுதியில் பாத்திமாவைத்தான் வேட்பாளராக நிறுத்த முடிவு செய்தோம். இந்த தகவலை தெரிந்து கொண்ட சிலர்  அவருக்கு மிரட்டல் விடுத்தனர்.  அதன் பிறகுதான் நான் போட்டியிடுவது என்று முடிவு எடுத்தேன். அந்த ஜீப்பில் நான் வருவதாக நினைத்து என்னை கொல்லும் நோக்கத்தில் வாகனத்தைவிட்டு மோதி உள்ளனர். இது திட்டமிட்டு நடந்த சதியாகும். ஆனால் நான் அந்த ஜீப்பில் வரவில்லை. அதனால் உயிர் தப்பினேன் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil