திமுக தேர்தல் அறிக்கை: தொண்டர்களுக்கு டி.ஆர்.பாலு வேண்டுகோள்

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (14:33 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில் தேர்தலை சந்திக்க திமுக தற்போது தயாராகி வருகிறது. இதற்காக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் டிஆர் பாலு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது தேர்தல் அறிக்கை தயாரிக்கும் ஒருங்கிணைப்பாளரான டிஆர் பாலு தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:
 
2021 இல் நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலை ஒட்டி திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஒருங்கிணைப்பாளர் டி ஆர் பாலு தலைமையிலான குழுவினரிடம் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய பொது அம்சங்கள் குறித்தும் தங்கள் மாவட்டத்தில் பிரச்சனைகள் குறித்தும் இடம்பெற வேண்டிய சாராம்சங்களை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ தெரிவிக்க விரும்பும் கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கலாம் 
 
அத்துடன் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க விரும்புவோர் manifesto2021@dmk.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

குழந்தைகளின் நலனுக்காக சேர்ந்து வாழுங்கள்: பிரிந்து வாழும் தம்பதிக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை..!

20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க பாஸ்போர்ட் மதிப்பு குறைவு.. டாப் 10 பட்டியலில் இருந்து வெளியேற்றம்..

அடுத்த கட்டுரையில்
Show comments