ஆளுநராக செயல்படுங்க.. பாஜக தலைவராக அல்ல! – ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு டி.ஆர்.பாலு அட்வைஸ்!

Webdunia
வியாழன், 5 ஜனவரி 2023 (12:41 IST)
சமீப காலமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும் கருத்துகள் சர்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில் அவருக்கு பதிலளிக்கும் வகையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேசியுள்ளார்.

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது இந்து மத ரீதியாகவும், தமிழக அரசியலை மறைமுகமாக விமர்சிக்கும் விதமாகவும் பேசி வருவது திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டு வருவதாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள திமுக பொருளாளர் எம்.பி டி.ஆர்.பாலு ”தமிழ்நாடு, தமிழர், தமிழ் போன்ற வார்த்தைகள் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கசப்பாக இருக்கின்றன. பீகாரும், உத்தரப்பிரதேசமும் இன்று எப்படி இருக்கின்றன? தமிழ்நாடு எப்படி இருக்கிறது? என்பது தெரியாதா?

தமிழ்நாடு வளர்ந்திருப்பதை கண்டு எரிச்சலடையும் சிலரில் ஆளுநரும் ஒருவராக இருப்பது அதிர்ச்சியை தருகிறது. தமிழக பாஜகவிற்கு ஒரு மாநில தலைவர் போதும். ஆளுநர் ரவி பாஜக மாநில தலைவராக செயல்பட வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரபல அரசியல் தலைவர் மற்றும் மகனுக்கு 7 ஆண்டுகள் சிறை.. 2 பான்கார்டு வைத்திருந்த வழக்கு..!

'இந்தியா' கூட்டணிக்கு தலைமையை மாற்ற வேண்டும்; அகிலேஷ் யாதவ் பெயரை முன்னிறுத்திய சமாஜ்வாடி!

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை.. நீதிமன்றம் தீர்ப்பு.. கலவரம் செய்பவர்களை சுட்டுக்கொல்ல உத்தரவு..!

இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: ஆரஞ்ச் எச்சரிக்கை விடுப்பு..!

நவம்பர் 20ல் புதிய கட்சியை தொடங்குகிறார் மல்லை சத்யா.. திராவிடத்தில் இன்னொரு கட்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments