Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலை மீது அவதூறு வழக்கு: டிஆர் பாலு தாக்கல்..!

Webdunia
வெள்ளி, 12 மே 2023 (10:20 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக பிரமுகர்கள் திமுக அமைச்சர்கள் மற்றும் முதல்வர் முக ஸ்டாலின் குடும்பத்தினர் ஆகியோர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார்.

இந்த சொத்து பட்டியலுக்கு திமுக தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது என்பதும் டிஆர் பாலு கனிமொழி உள்பட ஒரு சிலர் அண்ணாமலைக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினர் என்பதன் தெரிந்தது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் முதல்வர் முக ஸ்டாலின் சார்பில் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது டிஆர் பாலு தரப்பிலும் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்தி அவர்களிடம்  இந்த வழக்கு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடிப்படை ஆதாரம் இன்றி தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவும் பாஜகவும் மறைமுக கூட்டாளிகள்.. தவெகவுக்கு போட்டி திமுக தான்: விஜய்

செல்போனில் தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவர்.. வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணி தான் ஊழல் கூட்டணி: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னையில் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை..! ஒரு லட்சத்தை நெருங்குமா?

ஆளுநர் நிறுத்திவைத்த 10 மசோதாக்களும் சட்டமானது: அரசிதழில் வெளியீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments