தென்மாவட்டங்களில் கனமழை: குற்றால அருவிகளில் குளிக்க தடை

Mahendran
ஞாயிறு, 7 ஜனவரி 2024 (10:46 IST)
தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை காரணமாக குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மீண்டும் கன மழை பெய்து வருவதாக கூறப்படுகிறது. 

ALSO READ: தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024: முக்கிய அம்சங்கள் என்ன..?
 
இந்த நிலையில் கனமழை காரணமாக தென் மாவட்டங்களில் உள்ள ஒரு சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 
 
இதனால் சுற்றுலா பயணிகள் குழுக்க தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளான இன்று குற்றாலத்தில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்த நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  இருப்பினும் தண்ணீர் குறைந்தவுடன் குளிப்பதற்கான தடை நீக்கப்படும் என்று சுற்றுலா பயணிகள் காத்திருக்கின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments