Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் !

Webdunia
ஞாயிறு, 30 ஜூன் 2019 (15:09 IST)
சென்னை பல்லாவரம்  அருகே உள்ள பகுதியில் ஆறு வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாள். அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததை அடுத்து போலீஸார் ஓட்டுநரை கைது செய்தனர்.
சென்னை பல்லாவரம் அருகே  உள்ள நாகல்கேணியை சேர்ந்த 6 வயது சிறுமொ ஒருவர் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அதேபகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்  பாண்டியன் என்பவர், சிறுமையைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். பின்னர் சிறுமி வீட்டிற்கு வந்ததும் தனக்கு உடல்வலிப்பதாகக் கூறியுள்ளார். இதனால் பதறிப்போன பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துசென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளதை தெரிவித்தனர். 
 
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர், பாண்டியனை பிடித்து சரமாரியாக அடித்து, தாம்பரம் போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்து, புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் பாண்டியனிடன் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்