Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவில் இணைய உள்ளவர்கள் யார் யார் என்பதை நாளை தெரிந்து கொள்ளலாம்! - மத்திய அமைச்சர் எல்.முருகன்!

J.Durai
திங்கள், 26 பிப்ரவரி 2024 (12:16 IST)
கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சற்றுமுன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.


 
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்ததாவது,

'தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்ற.. ஏற்படுத்திய பாஜகவின் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நாளை நடைபெற உள்ளது. இதில் பாரத பிரதமர் மோடி அவர்கள் கலந்து கொள்ள உள்ளார்.

தமிழக அரசியலில் இது மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதுவரை எந்த அரசியல் கட்சிகளும் செய்யாத அளவிற்கு பிரம்மாண்ட பொதுக்கூட்டமாக இது இருக்கும்.

தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரைக்கு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பேராதரவும் அன்பும் கிடைத்துள்ளது.

ALSO READ: பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சி.. அனாதையாக விடப்பட்ட அதிமுக..!
 
பாஜக அரசின் கடந்த பத்தாண்டு கால சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்வதோடு, தமிழகத்தை ஆளும் திமுக அரசின் இயலாமையையும் ஊழல்களையும் மக்களிடத்தில் எடுத்து கூறியுள்ளோம். இதன் நிறைவு விழா பாரதப்பிரதமர் தலைமையில் பல்லடத்தில் நாளை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் போதை பொருட்கள் பழக்கம் மிக அதிகமாகியுள்ளது. குறிப்பாக கஞ்சா அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது. சுமார் 3000  கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா கடத்தலில் திமுக நிர்வாகி ஈடுபட்டிருப்பது வெளியுலகத்திற்கு தெரிய வந்தது. அவர்கள் மீது தமிழக முதல்வர் ஸ்டாலின் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சியினர் மற்றும் பலர் நாளை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். பாஜகவில் இணைய உள்ளவர்கள் யார் யார் என்பதை நாளை தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அய்யப்பனை தரிசனம் செய்ய குறைவான பக்தர்களுக்கே அனுமதி: என்ன காரணம்?

ரகுபதி சட்டத்துறை அமைச்சரா; தி.மு.க., பேட்டை ரவுடியா? அண்ணாமலை

வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. புயல் எச்சரிக்கை தளர்த்தப்பட்டதாக அறிவிப்பு..!

விண்ணில் செலுத்தப்படுகிறது பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்.. கவுண்ட் டவுன் தொடக்கம்..!

திருவனந்தபுரத்தில் இருந்து வந்த 8 லாரிகள்: மீண்டும் கேரளாவுக்கே செல்லும் மருத்துவக் கழிவுகள்

அடுத்த கட்டுரையில்
Show comments