Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மீண்டும் விடுமுறை

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2015 (22:46 IST)
சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.


 
 
கடந்த இரண்டு வாரம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் இயல்பு நிலை திரும்பியதையடுத்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் சில தினங்கள் மட்டுமே பள்ளிகள் செயல்பட்டன. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளில் வெள்ள நீர் முழுமையாக வடியாததால் சுமார் 50 பள்ளிக்கூடங்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது
 
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கை மற்றும் வடதமிழகம் ஒட்டியுள்ள வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளதால், வங்கக்கடலில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலைகள் காரணமாக மீண்டும் கனமழைக்கு பெய்து வருகிறது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் பள்ளி-கல்லூரிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
 
நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

Show comments