Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை தொடங்குகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு.. அனைத்து ஏற்பாடுகளும் தயார்..!

Siva
வியாழன், 29 பிப்ரவரி 2024 (07:59 IST)
தமிழகத்தில் நாளை பிளஸ் 2 தேர்வுகள் தொடங்க இருப்பதை அடுத்து தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிளஸ் டூ தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதி தொடங்கும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அட்டவணை வெளியான நிலையில் நாளை பிளஸ் டூ தேர்வு தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

நாளை தொடங்கும் பிளஸ் டூ தேர்வு மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் காலை 10 மணி முதல் மதியம் 1.15 வரை தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

காலை 10 மணி முதல் 10.10 மணி வரை கேள்வித்தாளை மாணவர்கள் படிப்பதற்கான நேரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் 10.10 முதல் 10.15 வரை மாணவர்கள் தங்களுடைய ஹால் டிக்கெட் உள்பட அடையாளங்களை உறுதி செய்ய வேண்டும் என்றும் 10.15 முதல் மாணவர்கள் தேர்வுகளை எழுத தொடங்கலாம் என்றும் 1.15 வரை   மணிக்கு சரியாக மாணவர்கள் தேர்வை எழுதி முடித்து விட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

பிளஸ் டூ தேர்வு நாளைய தொடங்க உள்ள நிலையில் மே 6ஆம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது முற்றுப்புள்ளி


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments