Webdunia - Bharat's app for daily news and videos

Install App

TNPSC குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்.!

Senthil Velan
வியாழன், 18 ஜூலை 2024 (11:49 IST)
TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 2A முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். விண்ணப்பத்தாரகள் https://www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள  உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், துணைப் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தனிப்பிரிவு அலுவலர், உதவிப் பிரிவு அலுவலர், வனவர் என 507 குரூப் 2 பணியிடங்கள் மற்றும் மேலாண்மை இயக்குநரின் நேர்முக உதவியாளர், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், மேற்பார்வையாளர், இளநிலைக் கண்காணிப்பாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,820 குரூப் 2 A பணியிடங்கள் என்று 2,327 இடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2ஏ முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி ஜூன் 20ம் தேதி  வெளியிட்டது.   
 
முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தேர்ச்சி பெறுவோருக்கு மெயின் தேர்வு குரூப்-2 பணிகளுக்கு தனியாகவும், அதேபோல், குரூப்-2 ஏ பணிகளுக்கு தனியாகவும் நடத்தப்பட இருக்கிறது. இதுவரை குரூப்-2 பணிகளுக்கு நேர்காணல் இருந்து வந்தது. தற்போது முதல்முறையாக குரூப்-2 ஏ பணிகளைப் போன்று குரூப்-2 பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கிடையாது.

ALSO READ: தமிழ்நாடு நாள் இன்று கொண்டாட்டம்..! முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!
 
இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2A முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும்.  விண்ணப்பத்தாரகள் https://www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments