கனமழை தொடர்ந்த போதிலும் பள்ளிகள் இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2017 (07:17 IST)
நேற்று இரவு முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில்  நல்ல மழை பெய்து வரும் நிலையிலும் இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


 


சென்னையில் நேற்று இரவு முழுவதும் மழை பெய்தது மட்டுமின்றி இன்று காலையும் மந்தவெளி, மைலாப்பூர், ராயப்பேட்டை, போரூர், ராமாபுரம், வளசரவாக்கம், விருகம்பாக்கம், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது

இந்த நிலையில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக மாணவர்கள் மழை பெய்த போதிலும் பள்ளிக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments